Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஃபைசர் நாட்டை வந்தடைந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி 26,000 டோஸ் ஃபைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசிகளின் 26,000 டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை மொத்தமாக 8,571,000 கோவிசீல்ட், சினோபார்ம், ஸ்புட்னிக் V மற்றும் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில் 5,330,492 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

Related posts

கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று 

wpengine

 அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம்

wpengine

தெற்கு அதிவேக வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை

wpengine