உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை விவசாய சம்மேளனத்திடமிருந்து அரசுக்கு எச்சரிக்கை..

விவசாயிகள் கடந்த போகத்தின் போது எதிர்கொண்ட பாரிய இழப்பீடு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், விவசாய அமைச்சுக்கு எதிராக செயற்படப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னவினால் குறித்த இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் நேற்று(11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த போகத்தின் போது ஏற்பட்ட வரட்சி காரணமாக விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் நோக்கினர்.

எனவே இது தொடர்பில் தமக்கு நட்டயீட்டை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அதனை தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் வழங்க வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் மேலும் அரசிடம் கோரியுள்ளது.

(rizmira)

Related posts

லஞ்ச ஊழல் மோசடி வழக்கில் ஐ.நா முன்னாள் தலைவர் கைது

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்களுக்கு கென்ய ஜனாதிபதி பாராட்டு…

wpengine

மஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…

wpengine