விளையாட்டு

அகில தனஞ்சய ஹெற்றிக் சாதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 போட்டியில் அகில தனஞ்சய தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனையை படைத்துள்ளார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனது கன்னி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடி பெத்தும் நிஷங்க 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எவரெஸ்ட் பிரிமியர் லீக் தொடருக்கு தினேஸ் சந்திமால்

wpengine

நிலைதடுமாற்றத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine

லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் வெற்றியினை பெற்றுக் கொடுத்தது..

wpengine