உள்நாட்டு செய்திகள்

அசாத் சாலியின் விசாரணைகள் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

அசாத் சாலி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளின் போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஊடக மாநாடு தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உரிமை மீறலாகும் எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இர்பான் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை…

wpengine

ஜனாதிபதியின் அழைப்பினை ‘மனோ’ நிராகரிப்பு…

wpengine

தவறான புரிதலால் மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பிழையான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம் – மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் தெரிவிப்பு

wpengine