உள்நாட்டு செய்திகள்

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

(FASTNEWS|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதுடன், வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் எமவும் தெரிவித்துள்ளது.

Related posts

செலவுகளை கட்டுப்படுத்த அமைச்சு மட்ட குழு நியமனம்..

wpengine

சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது…

wpengine

தேர்தல் செலவு அறிக்கை – ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

wpengine