Top Story 1உள்நாட்டு செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும், அதற்கான நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

Related posts

களனிவெளி புகையிரத சேவையில் தாமதம்…

wpengine

தீவிரத் தீர்மானங்களை முன்னெடுக்கும் மஹிந்த தரப்பினர்

wpengine

இந்தியாவில் விளையாடவுள்ள திஸர

wpengine