கேளிக்கை

அட்லீ பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட்…

இன்று(21) அட்லீயின் பிறந்த நாளையொட்டி மெர்சல் படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தெறியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மெர்சல்.

மெர்சல் டைட்டிலுக்கு டிரேட் மார்க் சிம்பல் பெறப்பட்டது. பின்னர் முதல்முறையாக மெர்சல் எமோஜியும் வெளியிடப்பட்டது. சமீபத்தில் ‘மெர்சல்’ ஆடியோ வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தனர்.

விஜய்யுடன், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், என 3 ஹீரோயின்கள் உள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மெர்சல் படத்தை ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்துள்ளது. விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.

Related posts

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கோபமடைந்த தர்ஷனின் காதலி

wpengine

இறப்பதற்கு முன்பு இதில் சாதிக்க ஆசையாக இருக்கிறது – படுகோன் அதிரடி..

wpengine

தனுஷின் புதிய படத்தின் பெயர் வெளியாகியது

wpengine