உலக செய்திகள்

அதிவேக ரயில் – பேருந்து கோர விபத்தில் 30 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான் ) – பாகிஸ்தானில் ரயில் கடவை அற்ற தண்டாவாளத்தை கடக்க முயன்ற பேருந்துமீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த ‘பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ ரயில் பேருந்துமீது மோதிய வேகத்தில் ரயிலின் முன்புறம் சிக்கிக்கொண்ட பேருந்து தண்டவாளத்தில் 200 மீட்டர்கள் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related posts

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் இராஜினாமா

wpengine

உயிர்க்கொல்லி எபோலாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு

wpengine

லெபனான் பிரதமர் பதவி இராஜினாமா

wpengine