உள்நாட்டு செய்திகள்

அநுராதபுர – பொலன்னறுவை வைத்தியசாலைகளில் நாளை தாதியர் பணிப்புறக்கணிப்பு…

பிரதான கோரிக்கைகள் இரண்டினை முன்வைத்து நாளை(21) அநுராதபுர மற்றும் பொலன்னறுவையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தாதி ஊழியர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், அதிகாரிகள் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியதால் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை(21) காலை 07.00 மணியில் இருந்து நாளை மறுதினம்(22) காலை 07.00 மணி வரையில் தமது சங்க தாதியர்கள் சுகயீன விடுமுறையின் கீழும், அதற்கு மாறாக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு முன்னாள் நாளை(21) எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதோடு, விரைவில் தீர்வு கிடைக்கா விடின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் குறித்த தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

உடவலவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 03 திறப்பு…

wpengine

ஜோதிடர் சுமணதாசவிடம் FCID எட்டு மணி நேர விசாரணை

wpengine

மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழுவினர் விஜயம்!

wpengine