உள்நாட்டு செய்திகள்

அனுரகுமாரவின் மனு 20 ஆம் திகதி பரிசீலனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை செல்லுபடிற்றதாக்குமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதைத் தடுக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோர் மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தனர்.

Related posts

பொருட்களின் பழைய விலை மட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது

wpengine

அடிக்கடி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சிறைக் கைதிகளை தடுத்து வைக்க புதிய சிறைச்சாலை

wpengine

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்…

wpengine