Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – கைதான நபரின் வீட்டில் கைக்குண்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வைத்தியரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (13) அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை

News Editor

எதிர்வரும் 03 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்…

wpengine