உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அனுஷ சமரநாயக்க குறித்து விசாரணை

இலங்கை கிரிக்கட் நிறுவனப் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான அனுஷ சமரநாயக்க தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, கிரிக்கட் நிறுவனத்தின் ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் முகாமையாளர் லக்ஷ்மன் டி சில்வாவினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T-20 கிரிக்கட் போட்டியின் போது, பயிற்றுவிப்பாளர் அனுஷ, பிரபல நடிகையான நெது பிரியங்கிகா மற்றும் சில பிரபல நடிகைகளுடன் விளையாட்டு தளத்தினுள் பிரவேசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐ.பி.எல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியை கண்டு களிப்பதற்காக சிலரை அழைத்துச் சென்று நாடு திரும்பிய போது நிதி மோசடியொன்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போதும் நடிகைகள் மற்றும் மொடல் அழகிகளை பயிற்றுவிப்பாளர் அனுஷ அழைத்துச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நீதிபதிகளுக்கு இந்தியாவில் ஐந்து நாள் பயற்சி.

wpengine

வஸீம் கொலைதாரிகள் விரைவில் சிக்குவர் – அமைச்சர் ராஜித

wpengine

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக வழக்குத் தொடரும் ஜாதிக ஹெல உறுமய

wpengine