உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அனைத்து வீர வீராங்கனைகளிடமும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனை..

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீர வீராங்கனைகளிடமும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனை நடத்தப்படுவது கட்டாயம் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஊக்க மருந்து பயன்பாடு குறித்து பரிசோதனை நடத்தும் அதிகாரிகளுடன் கொழும்பில் நேற்று(11) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு சமாந்திரமாக, ஊக்க மருந்து பயன்பாடு குறித்தும் சோதனை நடத்தப்படும்.

மேலும், ஊக்க மருந்து பயன்பாட்டின் பாதிப்பு குறித்து தெளிவூட்டப்படும்.

இதேவேளை, போட்டி நடைபெறுவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக வீர வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பிலான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – விஷேட போக்குவரத்து சேவைகள்

wpengine

எதிர்வரும் 28 ஆம் திகதி சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெறும்..!

wpengine