உலக செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ் மருத்துவமனையில்…

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக, ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில்; முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்றும் புஷ்ஷுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் எச். புஷ் (93) இனது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்கொரியாவில் 1,600க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இராஜினாமா..!

wpengine

பங்குச் சந்தை  துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

wpengine

இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் சாத்தியம்

wpengine