உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க குடியுரிமைக்கான சீட்டிழுப்பில் இலங்கையருக்கும் அதிஷ்டம்..

2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை கிரீன்காட் எனப்படும் அமெரிக்க குடியுரிமைக்கான சீட்டிழுப்பு தொடர்பில் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவு பிரஜைகள் இந்த சீட்டிழுப்பில் கலந்துகொள்ள முடியும்.

சீட்டுழுப்புக்கான விண்ணப்பங்களை lk.usembassy.gov என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

அத்துடன், இந்த விண்ணப்பங்களை, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நேர்முகத் தெரிவுக்கு பின்னர், 2018ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான க்ரீன்காட் வழங்கப்படும்.

இதன் மூலம் சுமார் 400 இலங்கையர்களுக்கு அமெரிக்க கிரீன்காட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

வடக்கு மாகாண ஆளுநராக சார்ள்ஸை நியமிக்க அங்கீகாரம்

wpengine

இலங்கையர்களுக்கும் பாதிப்பு.. அமெரிக்காவிலுள்ள தூதரகம் அறிவிப்பு..

wpengine

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

wpengine