உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு விஜயம்

(FASTNEWS | COLOMBO)- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சில முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய மகாராணியை சந்திக்கவுள்ள ட்ரம்ப், அவருடன் பிரத்தியேக பகல் போசனத்தில் கலந்து கொள்வதுடன், இளவரசர் சாள்ஸ் உடன் தேநீர் விருந்திலும்; கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பக்கிங்ஹாம் மாளிகையில் ராஜதந்திரிகர்களுடனான விருந்து உபசாரத்திலும் ட்ரம்ப் பங்கு கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்; 90 பேர் உயிரிழப்பு

wpengine

சவூதி’யில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு…

wpengine

இங்கிலாந்தில் கடும் மழை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

wpengine