உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க தூதரக தற்கொலை தாக்குதல் சதி குறித்து அதிர்ச்சித் தகவல்

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீட்டிய சதி குறித்து திடிக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க துணை தூதரகம் உள்ளிட்ட சென்னையில் முக்கிய இடங்களில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாகிர் உசேன், மற்றொரு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது நண்பரான இலங்கையை சேர்ந்த முகமது சுலைமான், கடந்த ஆண்டு மலேசியாவில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விசாரணை அறிக்கை விவரங்களை இந்திய அரசிடம் மலேசியா அளித்துள்ளது. அதில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை துதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரோ துணை துதரகம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ சதி திட்டம் தீட்டியதாக சுலைமான் கூறியுள்ளான்.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக தற்கொலை படையை சேர்ந்த 2 தீவிரவாதிகளை மாலத்தீவில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக அழைத்து வரும் பணி தங்களிடம் வழங்கப்பட்டதாகவும் சுலைமான் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து தற்போது இலங்கை பொலிசார் வசம் உள்ள முகமது சுலைமானை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related posts

பாராளு.உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதி

wpengine

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு…

wpengine

மலையகத்துக்கான புகையிரத சேவை பாதிப்பு

wpengine