உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் இவ்வருடம் முன்னெடுக்கப்படாது…

2017ம் ஆண்டில் அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்கனவே இணங்கியிருந்த போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால், அமைச்சரவையில் மாற்றம் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வகித்து வரும் சில அமைச்சுப் பதவிகளை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கோரியிருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அனைவருக்கிடையிலும் இணக்கப்பாடு எட்டப்படவிட்டால் தற்போது இருக்கும் விதத்திலேயே அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளதன் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

(rizmira)

Related posts

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine

காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

wpengine

வெற்றிலை இல்லையேல் பூ மொட்டில் போட்டியிடும் மஹிந்த சகாக்கள்

wpengine