உள்நாட்டு செய்திகள்

அமைச்சர்களுக்கு புதிய சட்டம் அமுலாக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறித்த அமைச்சர்களுடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த புதிய முறை ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றம் கூடும் இரண்டாம் வாரத்தின் செவ்வாய்க்கிழைமை அமைச்சர்கள் கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விமான நிலையத்தில் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

Azeem Kilabdeen

எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம்..

wpengine

இன்று முதல் பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்

wpengine