உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

அமைச்சர் ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரங்களில் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம்(23) மஹிந்தானந்த அலுத்கமகே எழுப்பிய கேள்வியொன்றிற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தவறுதலான பதில் வழங்கியதனால் அவர் மீது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர இருப்பதாக இன்று(24) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் ஜோன் அமரதுங்க வழங்கும் பதில்கள் மீது எதுவித நம்பிக்கையும் இனிமேல் வராது எனவும் நேற்று வழங்கிய தவறான பதில்கள் மூலம் இது தெளிவாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம், மிக விரைவில் அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

Related posts

புகையிரத சேவைகளில் தாமதம்

wpengine

நாடு முழுவதும் தேடும் ஞானசார தேரரை கைது செய்ய‌ விடாம‌ல் பாதுகாப்பது விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க்ஷ‌வே.. (VIDEO)

wpengine

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

Azeem Kilabdeen