ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சுப் பதவி பறி போகும் அபாயம்

புகையிலை நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட புகைத்தல் காரணமாக ஏற்படும் நோய்களை குணமாக்க அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிடுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். புகையிலை நிறுவனம் அரசாங்கத்திற்கு வருடந்தோறும் 100 பில்லியன் வரி வருமானத்தை வழங்கி வருகிறது.

இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசாரம் அருந்துவதன் காரணமாக வருடந்தோறும் 35 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிகரட்டை விற்பனை செய்ய தடைவிதிக்கும் சட்டம் அடங்கிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதுடன் அது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், சிகரட் பெட்டிகளை மாத்திரமே கடைகளில் விற்பனை செய்ய முடியும்.

சுகாதார துறைக்காக தான் செயற்படுத்தி வரும் வேலைத்திட்டங்கள் காரணமாக தான் வகித்து வரும் சுகாதார அமைச்சர் பதவியை பறிக்க புகையிலை நிறுவனமும் மருந்து நிறுவனங்களும் எதிர்காலத்தில் முயற்சிகளை எடுக்கக் கூடும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்

Related posts

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்க முடியும்

wpengine

பெண்ணிற்காக அரச முடியினை இழந்தார்.. (PHOTOS)

wpengine

நல்லாட்சி சன்னி லியோனை வரவேற்கிறதா – விமல்

wpengine