ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அம்மாவை சந்திக்க துடிக்கிறாராம் விக்கியும் மங்களவும்..?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கு தமிழக அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதேபோல் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா, விரைவில் சந்திப்போம் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவும், ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், தமிழக அரசாங்கத் தரப்பில், இது தொடர்பாக எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. மும்பையில், ஜூன் 13, 14 ஆகிய தினங்களில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள மங்கள சமரவீர, இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டிற்கே தலைவனானாலும் எனக்கு நீ மகன்தான்; உள்ளத்தை கலங்கடிக்கும் தாய்பாசம் [VIDEO]

wpengine

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நுவான் பிரதீப் விளையாடுவது சந்தேகம்…

wpengine

அதிகளவு பேசப்பட்ட மஹேலவின் மனைவியின் பிகினி புகைப்படங்கள் வைரலாக… (Photos)

wpengine