உள்நாட்டு செய்திகள்

அரசின் வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – மங்கள..

ஐனநாயகம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய முக்கிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசின் கொள்கை செயல்படுத்தப்பட உள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(02) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன,மத, கட்சி வேறுபாடு இன்றி இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரச மற்றும் தனியார் ஊடகத்துறையினரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பொது மக்களுக்கு உண்மையை ஊடகங்கள் கூற வேண்டும். பூகோள ரீதியிலான நன்மைகளைப் பயன்படுத்தி நாட்டை மேம்படுத்த வேண்டும். ஊடகங்களும் இதற்கு உதவ வேண்டும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

(rizmira)

Related posts

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல்…

wpengine

சுயநலமின்றி நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – அஸ்கிரிய பீடாதிபதி

wpengine

இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று

wpengine