ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரசியலை கைவிட்டு சினிமாவை ஆயுதமாக ஏந்தும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திரைக்கதை, வசனம் ஒன்றை நீண்ட நாட்களாக தயாரித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில், பந்துல்ல குணவர்தன மற்றும் திணேஸ் குணவர்தன ஆகியோர் இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நகைச்சுவை வேடத்தில் களத்தில் இறங்கவுள்ளார்.

இதேவேளை குறித்த திரைப்படத்திற்கு “உண்டியலில் வசூல்” என பெயர் சூட்டப்பட்டுள்ளக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

புலிகளின் உறுப்பினர் என்று சந்தேகத்தின் பேரில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த இராணுவ வீரர் ஒருவருக்கு இருபது இலட்சம் ரூபா பிணை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தீர்ப்பில் நல்லாட்சியை குற்றம் சாட்டுவதாகவும் இதன்போது கூறினார்.

Related posts

, நாட்டைவிட்டு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ள பாதாள குழு

wpengine

சஜித்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

ஏப்ரல் 21: IS தாக்குதல் – ரிபாஸ் இற்கு 2022 வரை கடூழிய சிறை

wpengine