உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல்வாதிக்கு எதிராக பதிவிட்ட ஆசிரியரொருவர் இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பதுளை  பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது  பேஸ்புக்கில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே , மேற்படி சேவை  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பதுளைக்கு அண்மையிலுள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரே, இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியருக்கெதிராக , சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, ஆசிரியருக்கு எதிராக பதுளை நீதவான்  நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஆசிரியரின்  சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானதாகும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசியல் பின்னணியொன்றின் அடிப்படையிலேயே, ஆசிரியரின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இச் செயற்பாட்டிற்கு எதிராக, தொழிற்சங்க நடவடிக்கைளை  விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுத் தேர்தலினை முன்னிட்டு ஜேவிபி கட்சியின் சின்னத்தில் மாற்றம்..

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

wpengine

எஸ்.பி கூறியது உண்மையெனின் மைத்திரிபால சிறிசேன செய்தது தப்பு – கம்மன்பில

wpengine