உள்நாட்டு செய்திகள்

அரசியல் கைதிகளின் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை…

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற 3 அரசியல் கைதிகள் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை(26) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர்களது வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை மற்றும் போதைவஸ்த்துக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

குறித்த அரசியல் கைதிகள் இன்று 31ம் நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய்

wpengine

மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை – எஸ்.எம்.எம்.முஷாரப்..!

wpengine

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி

wpengine