உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு..

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறும் நேரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கை ரேகை இயந்திரம் பயன்படுத்தும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஊடாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

குறித்த இந்த ஆலோசனைக்கு அமைய புதிய நடவடிக்கை இன்று(03) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பத்திலான சுற்றறிக்கை இலக்கம் 03/2017 மற்றும் 2017.04.19 திகதியிலான கடிதத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் இன்று விசாரணை….

wpengine

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

wpengine

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – ஐந்து பேருக்கு விளக்கமறியல்

wpengine