உள்நாட்டு செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்களது வேலை நிறுத்தம் ஆரம்பம்..

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் இன்று(15) காலை 08:00 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்களது சங்கத்தின் பிரதம செயலாளர் தர்மசேரி ஏபா தெரிவித்திருந்தார்.

ஊழியர் பற்றாக்குறை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு போன்றவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரக் கோரிக்கை விடுத்து இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, குறித்த கோரிக்கைகளுக்கு இன்று(15) நண்பகல் 12:00 மணிக்கு முன்னர் தீர்வு எட்டப்படாதவிடத்து, தொடர்ச்சியாக போராட்டம் தொடரும் எனவும் குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma

Related posts

நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு

Azeem Kilabdeen

ஒரு கோடியைக் கடந்தது

wpengine

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine