உள்நாட்டு செய்திகள்

அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டோரின் 9பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

மாவனல்ல, அரநாயக்க பாரிய மண் சரிவில் புதையுண்டு உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(20) நடைபெறவுள்ளது.

மண்சரிவில் புதையுண்ட 14 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது என மண்சரிவு மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சடலங்களில் 9 சடலங்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

நேற்றைய தினம் அரசாங்க அதிகாரிகளும் பிரதேச மக்களும் இணைந்து நடத்திய கூட்டத்தின் போது, ஒன்பது பேரின் இறுதிக் கிரியைகளை இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் இன்று ஒரே இடத்தில் இந்த மண் சரிவில் உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட உள்ளனர்.

அரநாயக்க பொது மயானத்தில் இந்த இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட போகிறதா..? நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்..!

wpengine

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

wpengine