உள்நாட்டு செய்திகள்

அரபிக் கடலில் இன்று உருவாகும் நிசர்கா

(ஃபாஸ்ட் நியூஸ் |இந்தியா) – அரபிக் கடலில் இன்று(02) உருவாகும் நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசர்கா(Nisarga) என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்பகுதிகளுக்கு ஜூன் 3 வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில்…

wpengine

தோல்வியை அடுத்து ஸ்மித் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பியழைப்பு.

wpengine

500 ஆண்டுகள் சென்றாலும் மஹிந்த போன்ற தலைவர் உருவாக மாட்டார் – குமார வெல்கம

wpengine