உள்நாட்டு செய்திகள்

அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நோயில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

News Editor

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல

wpengine

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

wpengine