உள்நாட்டு செய்திகள்

அலோசியஸின் குறுஞ்செய்தியில் இரகசிய குறியீடு “ஆர்.கே. பி.எம்” வெளிக்கொணரப்பட்டது.  

மத்திய வங்கி முறி தொடர்பான நேற்றைய ஆணைக்குழு விசாரணையின் போது அலோசியஸ் அனுப்பிய  குறுஞ்செய்தியில் இரகசிய குறியீடு “ஆர்.கே. பி.எம்” என இருப்பது கண்டறியப்படுள்ளது.
அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் 8600 பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்  ஆர்.கே எனும் குறியீடு  ரவி கருணாநாயக்க என அர்த்தம் கொள்ளப்படுகிறது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று மத்திய வங்கி முறி தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன் தெரிவித்தது.
ஆனால் நேற்றைய தினம் ஆணைகுழு விசாரணையில் சாட்சியமளிக்கும் போது “ஆர்.கே” (R K)  என்ற சொல் தம்மை குறிக்கிறதா? என்பது தமக்கு தெரியாது என்று ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு

wpengine

இன்றைய வானிலை

wpengine

ஷிராந்தி ராஜபக்ஷ சி.ஐ.டி முன்னிலையில்.. – கலவரம் அடக்கும் பொலிசார் களத்தில்..

wpengine