உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசர நிலையினை சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார்நிலையில் – மேஜர் ஜெனரல் மகேஸ்

வட பகுதியில் எவ்வாறான அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், இராணுவத்தினர் மூலோபாய ரீதியாக தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

wpengine

வெலிபென்ன பிரதேசத்தில் விமானத் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

wpengine

புதிய வரிச் சட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு வரிச் சலுகை..

wpengine