Top Story 2உள்நாட்டு செய்திகள்

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால், லேலிஹெத்துவ சந்திக்கு அருகில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர், 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.மேலதிக விசாரணைகளில், கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றச்சம்பவத்தில், இந்த சந்தேக நபர் துப்பாக்கிதாரியாக செயல்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

அஹுங்கல்ல பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாக்கட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள், தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்…

wpengine

65,000 வீடுகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு தடை கோரி சுமந்திரன் உச்ச நீதிமன்றில் வழக்கு…

wpengine

சாதாரண தர பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்

wpengine