வணிகம்

அஹூங்கல்ல மற்றும் பெந்தொட்டைக்கு இடையில் பாரிய அளவிலான ஹோட்டல்…

காலி மாவட்டத்தில் அஹூங்கல்ல மற்றும் பெந்தொட்டைக்கும் இடையில் பாரிய அளவிலான ஹோட்டல் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் பென்செய் நிறுவனம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் ஜப்பான் நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இந்த ஹொட்டல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

உத்தேச ஹோட்ட திட்டம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை(25) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சர் கயந்த கருணாதிலகவை சந்தித்த இந்த நிறுவன குழுமத்தின் தலைவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

 

(rizmira)

Related posts

சேனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு

wpengine

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

wpengine

பிரான்ஸிற்கான இலங்கை தூதுவராக திலக் ரணவிராஜ நியமனம்…

wpengine