உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்கள்.

இலங்கை அரசாங்கம், சீனாவின் தலைமையிலான ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து ஒரு பில்லியன் டொலர்களை பல்வேறு திட்டங்களுக்காக பெற்றுக் கொள்ளவிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

உலக வங்கிக்கு எதிராகவே சீனா தலைமையிலான ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த வங்கியின் பொதுக்கூட்டம் பீஜிங்கில் நடைபெற்ற வேளையில்அதில் பற்கேற்ற ரவி கருணாநாயக்க, குறித்த வங்கியில் இருந்து இலங்கை நிதியைப் பெறவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

wpengine

ஐநா 31வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

wpengine

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

News Editor