உள்நாட்டு செய்திகள்

ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டிற்காக மஹிந்த மலேசியா விஜயம்..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குழு நாளை(31) மலேசியாவுக்கு புறப்படுகிறது.

மலேசியாவில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கும் நோக்கிலேயே குறித்த குழு அங்கு செல்கிறது.

இந்த மாநாடு எதிர்வரும் 4ம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, மஹிந்த ராஜபக்ஷவின் குழுவில் தினேஸ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,லொஹான் ரத்வத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார, ஏ எச்எம் அஷ்வர், முன்னாள், மாகாணசபை உறுப்பினர் உபாலி கொடிக்கார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் மாநாட்டுக்கு வெளியில் சீனாவின் கம்யூனிஸக்கட்சியினரை சந்திக்கவுள்ளனர்.அத்துடன் மஹிந்த ராஜபக்ச, மலேசிய பிரதமர் உட்பட்ட ஆசிய நாட்டு தலைவர்களையும் இதன்போது சந்திக்கவுள்ளதாக மஹிந்த தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

எவன்கார்ட் துப்பாக்கி களஞ்சியசாலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது…

wpengine

மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு ரணிலின் சட்டத்தரணியினால் மனு…

wpengine

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு…

wpengine