உள்நாட்டு செய்திகள்

ஆசிய ,ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 03வது கூட்டம் இலங்கையில்…

(FASTNEWS | COLOMBO)- அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகரிக்கும் முதியோரின் எண்ணிக்கைக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சவால் என்ற தொனிப்பொருளில் ஆசிய , ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 03ஆவது கூட்டத்தினை இலங்கையில் நடாத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, குறித்த கூட்டமானது 2019 ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையில் கொழும்பில் நடத்துவதற்கு அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான அனுசரனை மற்றும் வசதிகளை செய்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களும் ஆரம்ப கைத்தொழில் சம ஊக்குவிப்பு அமைச்சர் தயா கமகே அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்குகே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமால் குணரத்ன நியமனம்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2025 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல்!

Azeem Kilabdeen

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

wpengine