உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர் கல்வியற் கல்லூரிகளுக்கு இம்மாதம் வர்த்தமானியில் விண்ணப்பம்.

தேசிய ஆசிரியர் கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கு உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி, இம்முறை துறைசார்ந்த 27 பாட நெறிகளுக்காக 4 ஆயிரம் பேர் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பிரியந்தவின் சடலம் இன்று இலங்கைக்கு

wpengine

ரிஷாத், ஹ‌க்கீம், அதாவுள்ளாக்கு எதிராக‌ ம‌க்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய வேண்டும்

wpengine

ஐ.நாவில் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை அரசுக்கு அமைச்சர் ரிஷாட் நன்றி தெரிவிப்பு..

wpengine