உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிரியர் தினத்தன்று, அரசுக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்..

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொள்வதற்காகவும், அரசுக்குஅழுத்தம் கொடுக்கும் வகையிலும், எதிர்வரும் ஆசிரியர் தினத்தன்று, பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு இன்மை, 2016/2017 சுற்று நிருபத்துக்கு அமைய அதிபர்களுக்கான கொடுப்பனவை வழங்காமை, ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை வழங்காமை போன்ற பல காரணங்களை முன்வைத்தே, குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் 6ம் திகதி பகல் 2 மணிக்கு, கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்குமாறும் , அவ்வமைப்பு மேலும் அழைப்பு விடுத்துள்ளது.

 

(rizmira)

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோடஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்

wpengine

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

wpengine