உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆணைக்குழு விசாரணை முன்னிலையில் ஆஜராக முடியாது – மஹிந்த

ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்ல வேண்டியுள்ளமையால் இந்த விசாரணையில் பங்கேற்க முடியாது என்று அவர் மேலும் அறிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த கடந்த நான்கு தடவைகளாக பாரிய ஊழல் எதிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டார்.

எனினும் இன்று அவரின் சார்பில் சட்டத்தரணிகளே சமுகமளிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு பிணை

wpengine

சமஷ்டி பிரேரணை உடன் வாபஸ் பெறாவிடின் இரத்த வெள்ளம் பாயும் – இத்தேகந்தே தேரர் எச்சரிக்கை

wpengine

ஆளுங்கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காதிருக்க தீர்மானம்…

wpengine