உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அத்துமீறி நுழைய முற்பட்ட சுமார் 10 மாணவர்களை பொலிசாரின் கட்டுப்பாட்டில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்ப்பு ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொம்பனித் தெருவில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரையான யூனியன் பிளேஸ் பாதையில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————————————————————– (UPDATE)

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டப சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல்…

பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, கொம்பனித் தெருவில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரையான யூனியன் பிளேஸ் பாதையில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவு ஜனவரி 25 ம் திகதி வரை நீடிப்பு…

wpengine

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

wpengine

கொடதெனியா சிறுமியின் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்

wpengine