Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆறு நாடுகளுக்கு இலங்கை வர தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிடுகின்றது.

இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து எவரேனும் வருகை தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச வைத்தியர்கள் – ஆசிரியர்கள் நாளை(21) நாடுதழுவிய போராட்டத்தில்..

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

wpengine

எமில் ரஞ்சனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine