விளையாட்டு

இங்கிலாந்து வெற்றிக்களிப்பில் நியூஸிக்கு ஏமாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டது.

நாணயச் சுழட்சியில்  வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 24 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 191 ரன்களை வசப்படுத்தியது.

192 ரன்கள்  என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. கெப்டன் பிரண்டன் மெக்கல்லம் அதிரடியாக 35 ரன்கள் அடித்து நல்லதோர் தொடக்கத்தை கொடுத்த போதிலும், வில்லியம்சனை(57) தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இறுதியில் 17 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணி.

ஆட்டநாயகனாக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

ரங்கன ஹேரத் உலக சாதனை…

wpengine

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை அணி…

wpengine

160 ஓட்டங்களுடன் இலங்கையிடம் சுருண்டது சிம்பாபே அணியினர்..

wpengine