உள்நாட்டு செய்திகள்

இணையத்தளமூடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழை வழங்க நடவடிக்கை

(FASTNEWS|COLOMBO) பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் பிரதியை பரீட்சைத் திணைக்களத்திற்கு வருகைதராமல் இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம்  எடுத்துள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கான மாணவர்கள் தமது கடனட்டை அல்லது டெபிட் அட்டைகளைப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்றுச்சீட்டு இலக்கத்துடன், இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதனையடுத்து, குறித்த சான்றிதழை விரைவுத்தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

wpengine

முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி காலமானார்

wpengine

இன்றைய காலநிலை

wpengine