உள்நாட்டு செய்திகள்

இதுவரை 16,488 பேர் மீது வழக்குத் தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று(18) காலை 6 மணி முதல் இன்று(19) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 252 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரத்து 668 வாகனங்களும் இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 488 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 6,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

wpengine

மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!

News Editor

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக முன்னெடுப்பு…

wpengine