உள்நாட்டு செய்திகள்

இது ஒரு சிங்கள நாடு, ஆட்சியாளர்களுக்கு நினைத்தவாறு செயற்பட முடியாது – அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

இலங்கை ஒரு பௌத்த நாடு, சிங்களவர்களுக்கே இங்கு பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது இன்னும்  ஆட்சியாளர்களுக்கு நினைத்தவாறு செயற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மகாநாயக்க தேரரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

நாட்டில் பிரதான இனம் மற்றும் மதம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஆட்சியாளர்களை கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை அவை பொய் பிரச்சாரங்கள் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

உண்மை ஒருநாள் வெளிவரும், இந்த நாட்டில் மதத்துக்கு எதிராகவும், இனத்துக்கு எதிரான சக்திகள் வெளிக்கிளம்பும் சந்தர்ப்பங்களில் அவைகளை முறியடிக்க பௌத்த மதகுருமார்கள் பின்னிற்கப் போவதில்லை என்பதற்கு இறந்தகாலம் உதாரணமாக திகழ்ந்துள்ளது.

இது ஒரு சிங்கள நாடு, இங்கு சிங்களவர்களே பிரதான இனம். இது தவிர உலகில் சிங்களவர்களுக்கு என வேறு நாடுகள் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

டிக்கட் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு தண்டப்பணம் இரட்டிப்பாக வசூல்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு

wpengine

ISIS இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படும் கேரளா தம்பதி இறுதியாக இரண்டு மாதங்கள் இலங்கையில்..?

wpengine