விளையாட்டு

இந்தியாவினை எதிர்த்து வெற்றி பெற்றமைக்கு ஆஸி அணியினர் மீது கல் வீச்சுத் தாக்குதல்.. (Photos)

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இரண்டாவது T-20 போட்டிக்கு பின்னர் விடுதிக்கு திரும்பிய அவுஸ்திரேலிய வீரர்களின் பேரூந்து தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள பாரஸ்பரா மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து விடுதிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த பேரூந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பேரூந்தின் பக்கவாட்டு கண்ணாடியில் ஒன்று உடைந்து சிதறியுள்ளது. எதிர்பார்க்காத தாக்குதலை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் தாக்குதலுக்கு உள்ளான பேரூந்தின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

2016 ஆண்டுக்கான ICC டெஸ்ட் அணி பெயரிடப்பட்டுள்ளது – ரங்கன ஹேரத்திற்கும் இடம்.. (பட்டியல்)

wpengine

இரண்டு பிரிவுகளாக டெஸ்ட் போட்டிகளை மாற்றுவதற்கு BCCI எதிர்ப்பு.

wpengine

1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தினை கைப்பற்றி 20 வருடங்கள் நிறைவினை ஒட்டி T20.. – சனத் இடமிருந்து அழைப்பாணை.. (PHOTOS)

wpengine