உலக செய்திகள்

இந்தியாவின் இரட்டை உருமாற்ற கொரோனா 5 நாடுகளில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முந்தைய ஆண்டை விட அதிகமான பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கு, தடுப்பூசி வழங்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இரட்டிப்படைந்த உருமாற்ற கொரோனா கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. மிக வீரியமாக பரவும் இந்த கொரோனாவின் தொற்று தற்போது மேலும் 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளில் இந்த இரட்டிப்பு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

பக்தாத்தில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு…

wpengine

ஹாங்காங்  தேர்தல் : ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

wpengine

வடகொரியா அத்துமீறல் – போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு..

wpengine