உலக செய்திகள்

இந்தியாவில் மேலும் 19 பேருக்கு புதிய கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – பிரித்தானியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனாவினால், இந்தியாவில் மேலும் 19 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி வருவதையடுத்து அந்நாட்டுடனான, விமான போக்குவரத்தை நிறுத்தியதுடன், பிரித்தானியாவில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று(31) காலை நிலவரப்படி இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடாத்துமாறு ஹமாஸின் முன்னாள் தலைவர் அழைப்பு..!

wpengine

அண்டார்டிகாவிலும் கொரோனா

wpengine

Google நிறுவனத்திற்கு பூட்டு

wpengine